Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

என்பது லட்சம் ரூபாயில் முழு படத்தை முடித்த பாக்யராஜ் உதவியாளர்.....

On March 9, 2016
Yanai Meedhu Kuthirai Savari Audio Launch
Share
Yanai Meedhu Kuthirai Savari Audio Launch சமீபத்தில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் "யானை மீது குதிரை சவாரி" என்று பெயரிடப்பட்ட ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், அர்ச்சனா சிங்க், 'லொள்ளு சபா' சுவாமிநாதன், மிப்பு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குனர் கருப்பைய முருகன் தெரிவித்துள்ளார். கருப்பைய முருகன் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பாடல்களுக்கு இம்மலயன் இசையமைக்க, தாஜ்நூர் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படத்தை பற்றி மேடையில் பேசிய இயக்குனர் கருப்பைய முருகன், தான் இயக்குனர் பாக்கியராஜிடம் பல படங்களில் பணியாற்றியுள்ளதாக தெரிவித்தார். இப்படம் ஆரம்பம் முதல் முடிவு வரை அனைவரையும் சிரிக்க வைக்ககூடிய விதத்தில் நகைச்சுவை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இப்படத்திற்கு தானே தயாரிப்பாளராக இருந்தாலும் ரேகா கணேஷ் மற்றும் பிரேமலதா இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர் என்றும், அவர்களை தவிர வேறு சில நண்பர்களும் இப்படத்தின் தயாரிப்புக்கு பண உதவி மற்றும் இதர உதவிகளை செய்துள்ளதாக தெரிவித்ததார் இயக்குனர் கருப்பைய முருகன். இப்படம் முழுவதும் என்பது லட்சம் ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எந்த ஒரு படத்தையும், தயாரிப்பதை விட வெளியிடுவது தான் மிக கடினம் என தெரிவித்தார். இந்த படத்தை தான் அவுட்ரைட் விலைக்கு விற்க தயார் எனவும் தெரிவித்தார். தன்னால் இப்படத்தை விற்க முடியவில்லை என்றால், இப்படத்தை தானே வெளியிடுவதாகவும், தனக்கு தாயரிப்பில் உதவி செய்தவர்களை படம் ரிலீஸ் செய்வதற்கு மீண்டும் பணம் கேட்டு நச்சரிப்பேன் என நகைச்சுவையாகவும், சீரியசாகவும் மேடையில் தெரிவித்தார். படத்தின் இசை வெளியீட்டுக்கு இயக்குனர்கள் பாக்யராஜ் மற்றும் பேரரசு சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். படத்தின் இசையை பாக்கியராஜ் வெளியிட பேரரசு பெற்றுகொண்டார். இப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளிவர உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.