என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்-பரபரப்பை ஏற்படுத்திய ட்வீட்..!

‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். தற்போது அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா நடிப்பில் ‘நரகாசூரன்’ படத்தை இயக்கியுள்ளார். அடுத்ததாக, ‘நாடக மேடை’ என்னும் படத்தை இயக்க இருக்கிறார்.
இந்நிலையில், கார்த்திக் நரேன் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
“சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்”
என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கார்த்திக் நரேன்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
