Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

என்னய்யா இந்த விருச்சககாந்துக்கு? மீண்டுமா ஒரு சோதனையா??

On July 6, 2017
pallu
Share
pallu ‘காதல்’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தில் மிகவும் பேசப்பட்ட கேரக்டர் ‘விருச்சிககாந்த்’. இந்த விருச்சககாந்த் கதாபாத்திரத்தில் நடித்தவர் ‘பல்லு’ பாபு. காதலுக்கு பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின் வரும் காலங்களில் அவருக்கு நடிப்புக்கான சரியான வாய்புகள் கிடைக்கவில்லை. சுமார் ஆறு ஆண்டுகள் திரைத்துறை பக்கமோ அல்லது எங்குமோ அவரை காணவில்லை. சில நாட்களுக்கு முன்பு நம்முடைய ‘ஒற்றன் செய்தி’ இணையதளத்தில் விருச்சிககாந்த் என்கிற ‘பல்லு’ பாபு சென்னை எழும்பூரில் ஒரு கோவிலில் பிச்சை எடுத்த்கொண்டிருக்கிறார் என செய்தி வெளியிட்டோம். பின்னர் பல ஊடகங்களில் இந்த விஷயம் செய்தியாக வெளியானது. விருச்சககாந்த் பற்றி விஷயம் அறிந்த ‘பழைய வண்ணாரப்பேட்டை’ திரைப்பட இயக்குனர் மோகன் மற்றும் வில்லன் நடிகர் சாய் தீனா ஆகியோர் விருச்சககாந்த்தை எழும்பூர் கோவில் அருகிலிருந்து அவரை மீட்டனர். மீடப்பட்ட விருச்சிககாந்த் சாய் தீனா அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டார். விருச்சககாந்தின் மறுவாழ்விற்காக பலர் பண உதவி மற்றும் ஆடைகள் என செய்து வந்தனர். இந்நிலையில் விருச்சககாந்த் தினம்தோறும் மாலை நேரங்களில் சாய் தீனா வீடில்லிருந்து காணாமல் சென்று கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இதை பற்றி சாய் தீனாவும், மோகனும் விசாரிக்கையில், விருச்சிககாந்த் அருகிலிருக்கும் டாஸ்மாக்(அரசு மதுபான கடை) கடையில் தினம் வந்து மது அருந்துவதாக தெரிவித்துள்ளனர். விஷயம் அறிந்த இருவரும் அவருக்கு அறிவுரை கூறியதாக தெரிகிறது. சரி மதுவை விட்டுவிடுகிறேன் என்று பகலில் ஒத்துகொள்ளும் விருச்சககாந்த், மாலையானதும் டாஸ்மாக் கடைக்கு எஸ்கேப் ஆகிவந்துள்ளார். விருச்சிககாந்தின் நடவடிக்கைகளை பற்றி மோகன் மற்றும் சாய் தீன் கூறியதாவது, விருச்சககாந்த் பகலில் அமைதியாக இருப்பதாகவும் மாலையானால் அவருக்கு மது குடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு வருகிறாராம். விருச்சககாந்த் இவர்களிடமே மது வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். விருச்சககாந்த் மதுவுக்கு முழுமையாக அடிமையாகியுள்ளதாக கூறுகின்றனர். சாய் தீனா மற்றும் மோகன் இருவரும் விருச்சககாந்தை மது போதையில்லிருந்து மீட்டெடுக்க திட்டமிட்டு போதை மறுவாழ்வு மையங்களை தேடி சென்றுள்ளனர். அவர்கள் விசாரித்ததில் சென்னை மீஞ்சூர் அருகிலுள்ள நாப்பாளையம் கிராமத்திலுள்ள ஒரு மது போதை மறுவாழ்வு மையத்தில் ஜூலை 4ம் தேதி சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அந்த போதை மறுவாழ்வு மையத்திலிருந்து வந்திருக்கும் தகவல் தான் அதிர்ச்சி அளிக்கிறது. விருச்சககாந்த் பல வருடங்களாக தனிமையில் இருந்த போது அவர் மது போதைக்கு அடிமையாகியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவர் மஞ்சள் காமாலை நோயினால் பல நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் சரியான நேரத்தில் உணவு சாப்பிடாத காரணத்தினால் அவருக்கு இருந்துள்ள மஞ்சள் காமாலை நோய் அவருடைய கல்லீரலை பாதித்துள்ளது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ள விருச்சககாந்துக்கு தேவவையான மருத்துவ உதவிகளை மனிதநேயம் மிக்க இயக்குனர் மோகனும் வில்லன் நடிகர் சாய் தீனாவும் தான் செய்து வருகின்றனர். மறுவாழ்வு கிடைத்த நடிகர் விருச்சககாந்துக்கு, மது பழக்கத்தினால் வந்த மஞ்சள் காமாலை நோய் அவரை மீண்டும் சோக வாழ்க்கைக்கு இழுத்து சென்றுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.