Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

என்னது கன்றுகுட்டிக்கு மனிதமுகமா....

On June 7, 2017
bull
Share
bull மனிதர்களைப் போல முகத்துடன் பிறந்த கன்றுக்குட்டியை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று பொதுமக்கள் வணங்கத் தொடங்கினர். உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபர் நகரில் பசுமாடு கன்று ஈன்றது. அந்த கன்றுக்குட்டி மனித முகதுடன் பிறந்துள்ளது. மனிதர்களைப் போலவே கண், மூக்கு, காதுகளுடன் இருக்கும் அந்த கன்று மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று பொதுமக்களால் கருதப்பட்டது. இந்த கன்றுகுட்டியை கோயிலில் வைத்து வளர்க்க பொதுமக்கள் விரும்பினார்கள். ஆனால், சில மணி நேரங்களிலேயே கன்றுக்குட்டி உயிரிழந்தது. அதற்கு மாலை அணிவித்து கண்ணாடி பெட்டியில் வைத்து மக்கள் பார்த்து வணங்குவதற்காக வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் கன்றுக்குட்டிக்கு இறுதிச் சடங்கு நடக்கும் என்றும் பின் அங்கேயே கன்றுகுட்டிக்கு கோவில் கட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.