என்னது, எழில்பிரகாஷ் படமா? அப்படினா??

பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.
இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சரி, தலைப்புக்கும் இந்த மேலே பதிவிட்டுள்ள செய்திக்கும் சம்பந்தம் இல்லை என்று தானே சிந்திக்கிறீர்கள். மேலும் படியுங்கள்...
எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தை நேற்று துவங்கி உள்ளார்கள்...
நேற்று எளிமையாக ஒரு கோயிலில் இந்த புது படத்தின் துவக்க விழா நடை பெற்றது.
இப்படத்திற்கு C.சத்யா இசையமைக்க, மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளனர்.
எழில் பார்முலா எப்படியோ அப்படியே தான் இதுவும் ஒரு காமெடி சப்ஜெக்ட் படமாக தான் இருக்கும்.
மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்போ மேலே உள்ள தலைப்புக்கும் நீங்கள் படித்த செய்திக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நம்புங்கள்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
