Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்த 13 வயது சிறுவர்கள்.. எங்கே செல்கிறது நாடு..?

On July 11, 2024
Screenshot 2024-07-11 182837
Share
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நந்தியலா மாவட்டம், பகிடியாளா, முச்சுமாரி கிராமத்தில் 8 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் வசித்து வரும் பகுதியில் சிறிய அளவிலான குழந்தைகள் விளையாடும் பூங்கா ஒன்று உள்ளது. கடந்த சனிக்கிழமை பூங்காவுக்கு சென்று விளையாடிவிட்டு வருவதாக சென்ற சிறுமி, மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. சிறுமி மாயம்: இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், மகள் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லையே என பூங்காவுக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சிறுமி இல்லாத காரணத்தால், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமி அங்குள்ள கால்வாய் பகுதிக்கு சென்று இருக்கலாம் என்ற சதேகத்தில், அங்கும் சென்று பார்க்கப்பட்டது. சிறுமி கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. சிறார்கள் கைது: இந்நிலையில், நேற்று சிறுமி மாயமான விவகாரத்தில் (Nandyala 8 Year Old Girl Gang Rape) அதிர்ச்சி திருப்பமாக, 3 சிறார்கள் கைது செய்யப்பட்டனர். மோப்ப நாய் உதவியுடன் சிறுமி இறுதியாக சென்ற பகுதியில் நடந்த சோதனைக்குப்பின்னர், சிறுமி கால்வாய்க்கு அருகே தென்பட்ட தடயத்தை மோப்ப நாய் காண்பித்துக்கொடுத்தது. மேலும், அதே பகுதியில் வசித்து வரும் 3 சிறார்களின் வீடுகளுக்கு சென்றது. இதனால் சிறார்களை சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணையில் பகீர் உண்மை அம்பலமானது. பலாத்காரம் செய்து கொலை: அதாவது, சம்பவத்தன்று பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை கண்ட 3 சிறார்களும், தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர். கால்வாய்க்கு அருகேயுள்ள பகுதியில் வைத்து மூவரும் சிறுமியை ஒருவர்பின் ஒருவராக கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், மயங்கி கிடந்த சிறுமியை அவர்கள் கால்வாயில் வீசி இருக்கின்றனர். பின் எதுவும் தெரியாததுபோல் வீட்டிற்கு சென்றுள்ளனர் என்பது உறுதியானது. தற்போது சிறுமியின் உடல் தேடப்பட்டு வருகிறது. சிறுமியை சீரழித்த 3 சிறார்களும், சிறுமி படித்து வரும் பள்ளியிலேயே பயின்று வருகிறார்கள். இதில் 2 சிறார்களுக்கு 12 வயது ஆகிறது. அவர்கள் இருவரும் ஆறாம் வகுப்பு பயின்று வருகின்றனர். ஒரு சிறுவனுக்கு 13 வயது ஆகிறது. அவன் 8ம் வகுப்பு பயின்று வருகிறான். இந்த விஷயம் குறித்து நந்திகோட்குர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.