Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எடப்பாடி பழனிச்சாமி - டிடிவி தினகரன் மோதல் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு!

On August 5, 2017
ttv
Share
ttv அதிமுக அம்மா அணியில் முதல்வர் கே.பழனிச்சாமி தலைமையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களும் டிடிவி தினகரன் தலைமையில் சில எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டு வருகின்றனர். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கும் தினகரனுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதால் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிடிவி தினகரன் புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்று சென்னையில் அறிவித்தார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், எஸ்.டி.கே. ஜக்கையன், சி.சண்முகவேலு, மாதவரம் மூர்த்தி, டி.கே.எம் சின்னையா, முக்கூர் சுப்பிரமணியன், ஆர்.மனோகரன், சேலஞ்சர் துரை, கே.டி.பச்சைமால், ஜி.செந்தமிழன், ஆர்.பி.ஆதித்தனு, சாருபாலா தொண்டைமான், எஸ்.காமராஜ், மாணிக்கவாசகர் ஆகியோர் அதிமுக அம்மா அணியின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் தலைவராக கே.கே.சிவசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பிரிவு இணைசெயலாளர்களாக தங்கதுரை, திருப்பூர் சிவசாமி, கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக நாஞ்சில் சம்பத், இளவரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இணைச்செயலாளர்கள் நடராஜன், ராதாகிருஷ்ணன், சுகுமார் பாபு, நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அமைப்பு செயலாளர்களாக செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், கு.ப.கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வரும் 14ம் தேதி முதல் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் டிடிவி தினகரன். குறிப்பாக மதுரை மேலூரில் தனது பயணத்தை தொடங்குகிறார். இந்தச் சுற்றுப்பயணம் அதிமுகவை இணைக்கும் முயற்சியில் மேற்கொள்ளப்படுவதாக தினகரன் தெரிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.