"எங்கள் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார் ராகுல்": அமித்ஷா பாய்ச்சல்

"குஜராத் தேர்தலில் எங்கள் குறிக்கோள் திட்டத்தில் எங்களை வெற்றிபெறவிடாமல் தடுத்துவிட்டார் ராகுல் காந்தி" என அமித்ஷா ராகுல் மீது பாய்ந்துள்ளார்.
குஜராத் தேர்தல் முடிவு, நாட்டின் அரசியல் போக்கையே தீர்மானிக்கப்போகும் அளவுக்கு மிகவும் அதிகப்படியாகவே பேசப்பட்டது. இந்தச் சூழலில், குஜராத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெற்றி என்றாலும் பா.ஜ.க தன் குறிக்கோளை காங்கிரஸால் அடைய முடியாமல்போனது கட்சியின் மூத்த தலைகளுக்குப் பெரும் தலைவலியாகவே உள்ளது. இதுகுறித்து பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித்ஷா கூறுகையில், "2012-ம் ஆண்டு குஜராத்தில் பா.ஜ.க-விடம் 115 இடங்கள் இருந்தன. அதனால் இந்தப் பொதுத்தேர்தலில் 'மிஷன் 150' என்ற குறிக்கோளுடன் களம் இறங்கினோம். ஆனால், காங்கிரஸின் சாதி அரசியலால், வெறும் 99 இடங்களுடன் வெற்றி பெற்றுள்ளோம்" எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "காங்கிரஸில் புதிதாகத் தலைவர் பொறுப்பு ஏற்றுள்ள ராகுல், தனது கீழ்த்தரமான அரசியல் ஆயுதமாகச் சாதி அரசியலை முன்வைத்துக் களம் இறங்கியுள்ளார். காங்கிரஸ் இவ்வளவு கீழே இறங்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.

