ஊழலற்ற கூட்டணி கட்சிகளுன் சேர்ந்து தேர்தலில் போட்டி:மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்..!

ஊழலற்ற கூட்டணி கட்சிகளுன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப் போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் கமல்ஹாசன் அரசுக்கு எதிராக கடுமை யான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தமிழகத்தில் விரைவில் வர உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி நிர்வாகிகளை நியமித்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'ரஜினியும் நானும் ஒன்றாக வருவது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. ஆனால், அது நடக்க சாத்தியக்கூறுகள் இருக்கின்றன' என்ற கமல், 'மக்கள் நீதி மய்யம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடும். குறைந்தபட்சம் தமிழகத்திலாவது போட்டியிடுவோம் என்றார்.
இந்த நிலையில், தற்போது ஊழலற்ற கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறி உள்ளார். தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
