Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

உறுதியானது பா.ம.க, அதிமுக கூட்டணி..!

On February 19, 2019
ram
Share

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக, அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் ராமதாசை சந்தித்துப் பேசினர். பின்னர், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்திக்கச் சென்றனர். அப்போது ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் பிறகு கூட்டணி தொடர்பாக பேசி இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அதிமுக - பாமக கூட்டணி ஒப்பந்தத்தில், அதிமுக சார்பில் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோரும், பாமக சார்பில் அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணியும் கையெழுத்திட்டனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.