இல்லம் தேடி வரும் மதுபானங்கள் - ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும்...

 ,
தமிழ்நாட்டிற்கு மதுபானங்களின் விற்பனை மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருவதால் படிப்படியாக குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதுவரை சுமார் 500 கடைகளுக்கு மேல் மூடப்பட்டுள்ளது. மேலும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பகுதிகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு அந்த பகுதிகளில் மதுபான கடைகளை மூடவும் திட்டமிட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஸ்விக்கி, சொமேட்டோ, பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்கள் உணவு, காய்கறி மற்றும் மளிகைப்பொருட்களை டெலிவரி செய்து வருகிறது. தமிழகத்தில் வேலைக்கு செல்வோர் பலரும் இதில் ஆர்டர் செய்து பொருட்கள் மற்றும் உணவுகளை வாங்கி வருகின்றனர். எங்கிருந்து ஆர்டர் செய்தாலும் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்வதால் மக்கள் பலரும் இதில் ஆர்டர் செய்கின்றனர்.
இந்நிலையில், இந்த ஆப்கள் மூலம் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பீர், ஓயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒடிசா, மேற்கு வங்கத்தில் ஏற்கனவே மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய அனுமதி உள்ள நிலையில் தமிழ்நாடு, கர்நாடக, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அனுமதி பெற்று இதனை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
