Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ராகுல் காந்தியின் கருத்து என்ன ? தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி!

On October 21, 2017
c2d38987-10bc-494b-b90c-405e48e1eefb
Share
c2d38987-10bc-494b-b90c-405e48e1eefb

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ராகுல் காந்தியின் கருத்து என்ன ? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்

 

விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி வரி பற்றிய வசனத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ’மெர்சல்’ படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜகவினர் பலரும் என கோரி வருகின்றனர்..

இந்நிலையில், ‘மெர்சல்’ விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து ட்விட்டரில், ”திரைப்படம் என்பது தமிழ் மொழி, கலாச்சாரத்தின் ஆழமான வெளிப்பாடு. ’மெர்சல்’ விவகாரத்தில் தலையிடுவதன் மூலம் தமிழின் பெருமையை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம்” எனக் கூறியிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு, ராகுல் காந்தி அரசியல் குளிர்காய்வதாகவும், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அவரின் கருத்து என்ன? என்றும் தமிழிசை கேள்வியெழுப்பியுள்ளார்.

மெர்சல் படப் பிரச்னை சுமுகமான முடிவுக்கு வர வேண்டும் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.  

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.