Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இலங்கையின் புதிய சட்ட மசோதாவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி..!

On January 25, 2018
fishman 56564656
Share
fishman 56564656 எல்லை தாண்டுவதாக பிடிபடும் தமிழக மீனவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 17.5 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கச் செய்யும் புதிய சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படை குற்றம் சாட்டி வருகிறது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம், 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சமும், 15 முதல் 24 மீட்டர் நீள படகுக்கு ரூ.2 கோடியும், 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.10 கோடியும், 45 மீட்டர் முதல் 75 மீட்டர் நீளமுடைய படகுக்கு ரூ.15 கோடியும், 75 மீட்டருக்கு அதிகமுள்ள படகுக்கு ரூ.17.5 கோடியும் அபராதம் விதிக்கப்படும். இலங்கை எல்லைக்குள் அத்துமீறும் வெளிநாட்டு படகுகளின் உரிமையாளர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, வழக்கு ஒரு மாதத்துக்குள் முடித்து வைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய சட்ட மசோதா தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புயல் காலங்களில் திசை மாறி சென்றாலோ, தவறுதலாக எல்லை தாண்டினாலே கைது செய்யப்படும் நிலையில் இந்த சட்டம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று மீனவர்கள் கூறியுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.