இறந்த காதலிக்காக மது போதையில் உடன்கட்டை ஏறிய காதலன்!

சேரன் இயக்கிய பாரதி கண்ணம்மா என்ற படத்தில் மீனா இறந்ததும், அவரது உடலை எரித்த போது காதலனான பார்த்திபன் அந்த நெருப்பில் குதித்து உயிரை விடுவது போன்ற சினிமா காட்சி இருக்கும்.
ஆனால் அந்த சினிமா காட்சி தற்போது உண்மையாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கமலி பகுதியை சேர்ந்த இளைஞர், இளம்பெண்ணை காதலித்துள்ளார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில், இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனம் நொந்து போன காதலி, உயிரை மாய்த்துள்ளார். இதனால் மனமுடைந்த காதலன், மது அருந்திவிட்டு, இறுதிச் சடங்கு நடந்த இடத்திற்கு வந்தார்.
காதலியின் உடல் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் யாரும் எதிர்பார்க்கா நேரத்தில் குதித்தார். இதைக் கண்ட பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்து, அவரை மீட்டனர்.
பின்னர் சுயநினைவு இழந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த நிஜ சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
