இரு மத சம்பிரதாயப்படி நடக்கும் சமந்தா - நாக சைதன்யா திருமணம்...

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சற்று பிரபலமானவர் நடிகை சமந்தா. இன்று சமந்தாவிற்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவிற்க்கும் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது. கோவாவில் மிக பிரமாண்டமாக நடக்க உள்ள இந்த திருமணத்தில், மிகவும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சில முக்கிய புள்ளிகள் என சுமார் 150 பேர் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாக சைதன்யா ஹிந்து என்பதினால் கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று இந்து முறைப்படியும், சமந்தா கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதால் நாளை கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமண விழாவைத் தொடர்ந்து வரும் 10’ம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் திரை உலக பிரபலங்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். சமந்தாவின் ரசிகர்களில் சிலர் சமந்தாவின் திருமணத்தை கொண்டாடுகிறார்கள், அதேபோல் ஒரு சில ரசிகர்கள் சமந்தாவிற்கு திருமணமாவதால் அவர் மீண்டும் நடிக்க மாட்டாரே என்ற விரக்தியிலும் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் சமந்தா நடிப்பார்கள் என்று செய்திகள் வருகின்றன. ஹேப்பி மேரிட் லைப் சமந்தா & நாக சைதன்யா.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
