"இரும்புத்திரை" படத்தை ரிலீஸ் செய்ய தடை செய்து "ரெட்"போடும் அருள்பதி..!

விஷால் நடித்து மே 11 அன்று வெளியாக உள்ள இரும்பு திரை திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் அருள்பதி தலைமையில் ஒரு மாபியா கும்பல் பணத்துக்காக 5 சதவீத கமிஷனுக்காக விஷாலின் "இரும்புத்திரை" படத்தை ரிலீஸ் செய்ய தடை செய்து "ரெட்" போட்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் இரத்தம் குடிக்கும் மாபியா கும்பல் என கொந்தளிக்கிறார் தயாரிப்பாளர் PT.செல்வகுமார் . தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க செயலாளர் என சினிமாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவரின் படத்துக்கே இந்த நிலை என்றால் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் சூத்ரதாரி யார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக விநியோகஸ்தர் ஸ்ரீதரன் மாற்றும் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பி.டி.செல்வகுமார் கூறுகையில், இப்படத்தை வெளியிடாமல் தடுப்பது சென்னை செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி என குற்றம் சாட்டியுள்ளார். அருள்பதி மிரட்டியதற்கான ஆதார ஆடியோ அவர்களிடம் உள்ளதாகவும், அதை தமிழக காவல் துறை, சி.பி.ஐ போலீஸ் மற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நியாயம் வேண்டி புகார் கொடுப்பதோடு வழக்கும் தொடர போவதாக பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.
இது சம்மந்தமாக அருள்பதியிடம் விசாரிப்பதற்காக அவருக்கு பலமுறை போன் மூலம் தொடர்புகொள்ள முயற்சி செய்தும், அவர் போன் அழைப்பை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
