இரண்டு விஜய்களுடன் அசத்த வருகிறது நவீன் இயக்கும் அக்னிச்சிறகுகள்..!

சமீபகாலமாக சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகின்றனர் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். இருவரும் இணைந்து நவீன் இயக்கும் அக்னிச்சிறகுகள் படத்தில் நடிக்கவுள்ளனர். இதில் கதாநாயகியாக சாலினி பாண்டே நடிக்கவுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் நவீன் கூறுகையில்,
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அனைவரும் 'அக்னி சிறகுகள்' படத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்துவதை காண முடிகிறது. விஜய் ஆண்டனி, அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரின் ஸ்கிரீன் டெஸ்ட் தற்போது முடிந்துள்ளது.
முழுவீச்சில் ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் காட்சிகளை படமாக்குகிறோம். மேலும், விஜய் ஆண்டனி ஒரு புதிய தோற்றத்தில் இருப்பார், முதல் முறை பார்ப்பவர்களால் அது அவர் தான் என அடையாளம் காண முடியாத அளவிற்கு அவர் தோற்றம் இருக்கும். அவரது கதாபாத்திரம் வித்தியாசமான ஒன்று என்பதால் பல்வேறு தோற்றங்களை பரிசீலித்து, இறுதியாக சரியான ஒன்றைக் கண்டுபிடித்தோம் என்றார்.
படம் மற்றும் கதாபாத்திரங்கள் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, கதாபாத்திரங்களை பற்றி இப்போது சொன்னால் அது சரியாக இருக்காது. ஆனால், அக்னி சிறகுகள் எங்கள் முந்தைய திரைப்படங்களில் இருந்து மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன் என்று கூறியுள்ளார்.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
