Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இயற்கை பழங்களின் பயன்கள்...

On June 8, 2017
palam
Share
palam இன்றைய வாழ்வின் தரத்தை குறைக்கும் வண்ணம் நம்ம ஊரில் ஏகப்பட்ட செயற்கை விஷயம் அமைந்துள்ளது. இந்நிலையில் இயற்கை பழங்களை உன்னால் எவ்ளோ பயன் என்று பாக்கலாம் வாருங்கள். சப்போட்டா: இது சருமம் பொலிவடைய செய்யும் தன்மை கொண்டது. வைட்டமின் ஏ நிறைந்தது. கண்களுக்கு சிறந்தது. உடல் எடையை குறைக்க உதவும். சிறந்த பழம் மட்டுமின்றி உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது. செவ்வாழை: வைட்டமின் பி6 நிறைந்தது. இதை தொடர்ந்து சாப்பிடும் போது உடல் சுறுசுறுப்படையும். நெஞ்செரிச்சலை போக்கும் தன்மை கொண்டது. வைட்டமின்கள் நிறைந்து இருப்பதால் உடல் நலனுக்கு மிகவும் சிறந்தது. முலாம்பழம்: அல்சரை போக்கும் உயர்ந்த தன்மை கொண்டது. உடல் எடை குறைக்க உதவும். மலச்சிக்கலை போக்கும் குணம் கொண்டது. கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்ற பழம். இதனை ஜீஸ் ஆக்கி சாப்பிடும் போது உடல் வலிமை பெறுகிறது. ஆரஞ்சுப்பழம்: ரத்தக் கொழுப்பை குறைக்கும். சிறுநீரக கோளாறு வராமல் தவிர்க்க உதவும். இதயத்தை பலப்படுத்தும் தன்மை கொண்டது. இதன் பழச்சாறில் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளது. பப்பாளி: ரத்த கொழுப்பை குறைக்கும். நீரிழிவு மற்றும் ஆர்த்ரிடிஸ் நோய்க்கு மிகவும் சிறந்தது. இதிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோடின் கண்களுக்கு சிறந்ததாகும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.