Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இயக்குனர் செல்வராகவனின் தீரா ஆசை "ஆயிரத்தில் ஒருவன் 2"..!

On November 29, 2018
201811242130424_CG_
Share
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010இல் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்ற படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. நடிகர் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் போன்ற பலரது நடிப்பில் 12ஆம் நூற்றாண்டின் காலகட்டத்தை சேர்ந்த சோழர்களின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு இந்த படம் வெளியானது. தற்போது வரையிலும் மக்கள் மனதில் 'நெல் ஆடிய நிலம் எங்கே' என்ற பாடல்தான் ஒலித்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதே தன்னுடைய நீண்ட நாள் ஆசை என்று இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவருடைய டிவிட்டரில் "வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை  2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்." என்று பதிவு செய்துள்ளார். இவருடைய இயக்கத்தில் தற்போது சூர்யாவின் 'என்ஜிகே' படம் உருவாகி வருகிறது. இது தவிர மன்னவன் வந்தானடி, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் ஆயிரத்தில் ஓருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் செல்வராகவன் ஆர்வம் காட்டி வருகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.