‘இம்சை’ அரசாகவே மாறிய தமிழக அரசு!

தமிழ் நாட்டில் தினந்தோறும் அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சமே இல்லை . செய்திசேனல்கள் எல்லாம் நிரந்தர ப்ளாஸ் நீயூஸ் சேனல்களாகவே மாறிப்போய்விட்டது. ஒருபுறம் கமல் அரசியலுக்கு வரப்போவதாக அதகளம் பண்ணிக்கொண்டிருக்க இன்னொருபுறம் இந்த ஆட்சி நீடிக்குமா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் தொற்றிக்கொண்டிருக்கிறது.
இவ்வளவு அரசியல் களேபரங்களுக்கு இடையிலும் தமிழ்நாட்டு அமைச்சர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறையவே இல்லை. அவர்களின் ஹியூமர் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே உள்ளது. தினந்தோறும் ஏதேனும் சம்மந்தமில்லாத கருத்துக்களை உலறி ,நெட்டிசன்களின் கலாய்க்கு ஆளாகிறார்கள்.
 ,
அமைச்சர் செல்லூர் ராஜீவின் தெர்மாகோல் ஆபரேசனுக்குப் பிறகு இந்த அரசின் அமைச்சர்கள் பலரும் காமெடி மன்னர்களாக மாறி சமீபத்தில் அவர்கள் உதிர்த்த காமெடி முத்துக்கள் பின்வருமாறு,
 ,
“சைவ உணவை சாப்பிட்டால் தான் இளைத்த உடலை பெற முடியும்!” - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
“மீன்கள் இனப்பெருக்கத்தால் வைகையில் நீர் மட்டம் குறைகிறது”!? – தெர்மாகோல் விஞ்ஞானி அமைச்சர் செல்லூர் ராஜீ.
“ டெல்லியிலிருந்து வந்த AC பஸ்களில் இருந்த கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவுகிறது”- அமைச்சர் காமராஜ்.
"விவசாயிகள் யாரும் வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளவில்லை, அதில் பலர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்"- அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.
"மக்கள் போட்டுக் குளிக்கும் சோப்புகளால் தான் நொய்யலாற்றில் நுரையாக உள்ளது "- அமைச்சர் கருப்பண்ணன்.
"சிவாஜி சிலை மீது காக்கை எச்சம் படாமலிருக்கவே அதிமுக அரசு மணிமண்டபம் கட்டியுள்ளது" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
"ஹெச்.ராஜா அவர்களின் தந்தையின் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி அவர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கச் சொன்னார்"- அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
“நான் திருப்பதியில் வேண்டியதால் தமிழகத்தில் மழைபெய்தது” - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
அமைச்சர்கள் தான் இப்படியென்றால் முதலைச்சர் இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலாக ‘இம்சை அரசன் புலிகேசி’ போல செயல்படுகிறார். மொத்தத்தில் இந்த அரசாங்கம் மக்களுக்கு ஒரு ‘இம்சை’ அரசாகவே மாறியுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
