Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இப்படியெல்லாம் கூடவா பேருந்தை வெச்சி ஓட்டுறாங்க?

On September 28, 2017
private bus1
Share
private bus1 கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப்பில் இருந்து நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று சிதம்பரம் நோக்கிப் புறப்பட்டது. இந்த பேருந்தை உடையூரைச் சேர்ந்த முருகன் ஓட்ட பேருந்தில் 40–க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்தப் பேருந்து சிதம்பரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு வந்துக் கொண்டிருந்தபோது, பேருந்தில் முன்புற இடதுப் பக்க சக்கரம் திடீரென்று கழன்று ஓடியது. பேருந்தின் தகரம் தரைத் தட்டியதை உணர்ந்த ஓட்டுநரை பேருந்தை நடுசாலையிலேயே நிறுத்தினார். இதனால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் காயம் எதுவும் இன்றி நல்ல வேளையாக உயிர் தப்பினர். private bus பேருந்து நடுசாலையிலேயே நின்றதால் வாகனங்கள் செல்ல வழியில்லாமல் சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து விபத்துக்குள்ளான பேருந்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். பின்னர், போக்குவரத்தும் ஒழுங்கானது. ஒடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து சக்கரம் கழன்று ஓடியதை பார்த்தவர்கள் இப்படியெல்லாம் கூடவா பேருந்தை வெச்சிட்டு இருப்பாங்க என்று புலம்பிக் கொண்டே சென்றனர்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.