இன்று ரிலீஸில் இருந்து வெளியேறிய "பாஸ்கர் ஒரு ராஸ்கல்"

'இரும்புத்திரை', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'நடிகையர் திலகம்', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய நான்கு படங்கள் இன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மம்மூட்டி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. சித்திக் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளின் ரீ-மேக்கையும் தானே இயக்கவிருப்பதாக இயக்குநர் சித்திக் கூறி இருந்தார்.
தமிழ் ரீமேக்கில் மம்மூட்டி வேடத்தில் அரவிந்த்சாமி நடித்தார். படத்துக்கு 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்று தலைப்பு வைக்கப்பட்டது. நாயகியாக அமலா பாலும், குழந்தையாக நைனிகாவும் நடித்துள்ளனர். ரோபோ சங்கர், சூரி உள்ளிட்ட பலரும் படத்தில் உள்ளனர்.
ஒற்றைப் பெற்றோருடன் வாழ்ந்து வரும் குழந்தைகள் நட்பாகி, எப்படி பெற்றோரைச் சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதையாகும்.
'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து தணிக்கை செய்யப்பட்டு படம் வெளியாவதற்குத் தயாராக இருந்த நிலையில், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பணப் பிரச்சினை காரணமாக படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' பிரச்சினைகள் சுமுகமாக முடிக்கப்பட்டு அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
