இன்று பரிசீலனை ஆர்.கே.நகர் வேட்புமனுக்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால், அவரது ஆர்.கே.நகர் தொகுதியில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 27 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பு மனுக்கள், இன்று பரிசீலனை செய்யப்படவுள்ளன.
ஒரு ஓட்டுப்பதிவு மிஷினில், 16 வேட்பாளர்களின் பெயர் இடம் பெற முடியும். வேட்பாளர்கள் எண்ணிக்கை, 32 ஆக இருந்தால், இரண்டு ஓட்டுப்பதிவு மிஷின் பயன்படுத்தப்படும்.
வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மிஷின்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். அதிகபட்சம் 4 மிஷின்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும். 63 வேட்பாளர்களுக்கு மேல் தேர்தலில் போட்டியிட்டால், மிஷின்களுக்கு பதில், பழைய முறையான ஓட்டுச் சீட்டுகளை பயன்படுத்த வேண்டும்.
இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட 127 பேர் மனுதாக்கல் செய்துள்ளதால், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தலைமையில் நடக்கவுள்ளது.
இதில் முறையாக தாக்கல் செய்யப்படாத, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ல்தேர்தல் நடக்கவுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஜோ-வின் ‘மகளிர் மட்டும்’ படப்பிடிப்பு நிறைவு:-
Next Post"ஒரு முகத்திரை" படத்தின் விமர்சனம்!
