Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்று டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்திப்பு!

On March 31, 2017
Kanimozhi380a
Share
Kanimozhi380a தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டத்தை நடத்திவரும் விவசாயகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகள் இணைப்பை உறுதிபடுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கோரிகைகளை போராடும் இந்த விவசாய்கள் எலியை வாயில் கவ்வியும், இறந்த பாம்பை வாயில் கடித்தும் பல்வேறு நூதன போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு அனைத்து கட்சி தலைவர்களும், நடிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று 18-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை தி.மு.க. எம்.பி. கனிமொழி ஜந்தர்மந்தர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேசினர். போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இன்று மதியம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் விவசாயிகளை நேரில் சந்தித்தார். அப்போது போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.