இன்றாவது முடிவுக்கு வருமா இரட்டை இலை விவகாரம்!

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற கேள்வி, அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்களில் துவங்கி, கீழ்மட்ட தொண்டர்கள் வரையில் பரவி கிடக்கிறது. இது தொடர்பாக, டில்லி தேர்தல் ஆணையத்தில், விசாரணை துவங்கி, அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
ஒவ்வொரு முறையும், சசிகலா மற்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள், பல்வேறு விபரங்களைக் கூறி, விசாரணை நேரம் முழுவதையும் ஆக்கிரமித்தனர். தினகரன் தரப்பு வழக்கறிஞர், விஜய் ஹன்சாரியா, தன் வாதங்களை நிறைவு செய்திருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினமும்(6ம் தேதி), தேர்தல் ஆணையத்தில் நடந்த வழக்கு விசாரணையிலும், நேரமாகிவிட்டதாக கூறி, தேர்தல் அதிகாரிகள் இன்று விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். இதையடுத்து, இன்று மாலை, 4:00 மணிக்கு, மீண்டும் விசாரணை நடக்கவுள்ளது.
மொத்தத்தில், தீர்ப்பு எப்போது வருமோ தெரியாது ஆனால் இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணை இன்றுடன் முடிவுக்கு வரும் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
