Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்னைக்கும் வரலாம், நாளைக்கு வரலாம் ஆனா வரும்!

On October 26, 2017
vanilai
Share
vanilai `தமிழகத்தில் நல்ல மழை பொழிவைக் கொடுத்த தென்மேற்குப் பருவமழை காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த 48 மணி நேரத்துக்குள் தமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. vanilai1 வட கிழக்குப் பருவமழை இன்று தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், அப்படி நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. நாளை கூட வட கிழக்குப் பருவமழை ஆரம்பமாகலாம். தென்கிழக்கு தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்' என்று தெரிவித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.