Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்த ஆண்டு இறுதிக்குள் கோயம்பேடு முழுவதுமாக மூடப்படுகிறதா?

On September 24, 2024
WhatsApp Image 2024-09-24 at 11.14.53
Share

கோயம்பேடு இருக்கும் இடத்தில விரைவில் புதிய திட்டம் வர வாய்ப்புள்ளது. இதற்காக அந்த பகுதிகளை இடிபாடுகளை மேற்கொள்ள அரசு ஆலோசனை செய்து வருகிறதாம். விரைவில் இதற்கான டெண்டர் விடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.முன்னதாக அங்கே பார்க் வரும் என்று கூறப்பட்டது.

ஆனால், கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கம் (Creation of Public Horticultural Garden, Public Green Spaces and Public Utilities) செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

150 ஏக்கர் கிண்டி ரேஸ்கோர்ஸை சென்ட்ரல் பூங்காவாக மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ள நிலையில்.. பெரிய சென்ட்ரல் பார்க் கொண்ட உலகளாவிய நகரங்களின் லிஸ்டில் சென்னையும் இணைந்துள்ளது.

1. நியூயார்க் - சென்ட்ரல் பார்க்

2. லண்டன் - ஹைட் பார்க்

3. பெர்லின் - Tiergarten பார்க்

4. டோக்கியோ - யோயோகி பூங்கா

5. மெக்சிகோ - Chapultepec பார்க் ஆகிய பார்க்குகள் உள்ளன. அந்த வரிசையில் தற்போது சென்னையில் மிகப்பெரிய பார்க் அமைய உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் 160.86 ஏக்கர் நிலம் 1.4.1945 ஆம் தேதி முதல் 99 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.

அரசிடமிருந்து கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட இந்த நிலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதால் தமிழ்நாடு அரசு குத்தகையை ரத்து செய்து, இந்த நிலத்தினை மீளப்பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களின் இதர பயன்பாட்டிற்காக உருவாக்கம் செய்யப்படவுள்ளது.

இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் என்ன கட்டுமானம் கொண்டு வரப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கே அமைக்கப்பட உள்ள திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கோயம்பேடுவில் உள்ள பரபரப்பான பேருந்து நிலையம் விரைவில் கலாச்சார, வணிக மற்றும் நிதி மையமாக மாற்றப்படும், ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதே சமயம் ஒரு சில பேருந்துகள், மாநகர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயங்குகின்றன.

ஈசிஆர் நோக்கி செல்லும் பேருந்துகள், பெங்களூர் செல்லும் பேருந்துகள் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயங்கும். இந்த வருட கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.