Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்து கடவுள்களை விமர்சித்த பிரபல இயக்குநர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்...

On May 17, 2018
bharathiraja
Share

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா இந்து கடவுள்களை விமர்சித்தும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன், வடபழனி போலீஸில் புகார் செய்தார், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி போலீஸார் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பாரதிராஜா மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக வடபழனி போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை தள்ளி வைத்தது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.