Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம்! சீனா மிரட்டல்

On August 6, 2017
army
Share
army சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீனா தன்னிச்சையாக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. தவிர,''எங்களது எல்லைக்குள்தான் இந்திய படைகள் அத்துமீறி நுழைந்துள்ளன. எனவே, இந்தியா தனது ராணுவத்தை உடனே திரும்ப பெறவேண்டும்'' என்று சீனா மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால் எழுந்த பிரச்சினையை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 16 -ந்தேதி முதல் டோக்லாமில் இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை குவித்து உள்ளன. Tamil_News_large கடந்த சில நாட்களாக சீன ராணுவம், திபெத் தன்னாட்சி பகுதியில் 18 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் பீரங்கிகளை குவித்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. இது இந்திய ராணுவத்தின் மீதான தாக்குதலுக்கான ஒத்திகை என்று சீன அரசின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டு உள்ளது. ஷாங்காய் சர்வதேச நட்புறவு நிறுவனத்தின் சமூக அறிவியல் அகாடமி ஆராய்ச்சியாளரான ஹூ ஷியோங் என்பவர் அந்த நாளிதழில் எழுதிய கட்டுரையில் கூறி இருப்பதாவது:- இந்த பகுதியில் இருந்து இன்னும் 2 வாரத்துக்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும். இதற்காக சிறிய அளவிலான போர் நடவடிக்கையை சீன ராணுவம் மேற்கொள்ளும். இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் தெரிவித்த பிறகே இந்த தாக்குதல் நடத்தப்படும். இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.