Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இதோ வந்துவிட்டது 200.ரூபாய் நோட்டுக்கள்!

On July 26, 2017
tow handrad
Share
tow handrad சில மதங்களுக்கு முன் வந்த ரூ.2000 ரூபாய் நோட்டுக்களைத் தொடர்ந்து ரூ.200 ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. புதிய ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் முதலீடு மற்றும் கரென்சி துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல்கட்டமாக ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி ஜூன் மாதம் துவங்கப்பட்டது. 21 நாட்களில் இப்பணி முடிவடைந்தது. இதனால் அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார். மேலும் ரூ.500 நோட்டுக்களை அதிக அளவில் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.200 நோட்டு வெளியீட்டிற்கு பிறகு ரூபாய் நோட்டு தட்டுப்பாடு குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.