இதுக்கு மரண தண்டனையா ?

அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள கன்சன் நகர் பகுதியில் வசிப்பவர் ரேணு ரபா. கடந்த சில நாட்களாக முட்டையிட்டு வரும் இவரது வாத்து, பக்கத்து வீட்டுக்காரரான குசும்பர் பருவா என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளது. இதனை அனுமதிக்காத பருவா, ஒரு குச்சியால் வாத்தினை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த வாத்து இறந்துள்ளது.
இதனையடுத்து மனமுடைந்த ரேணு, பருவாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் காவல்நிலையத்தில் புகாரளித்த ரேணு, பருவாவிற்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
காவல்துறையினர் பருவாவின் மேல் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். அவர் மீது ஐபிசி 429, என்ற சட்டத்தின் கீழ் மிருகத்தைக் கொலைசெய்த வழக்கு போடப்பட்டுள்ளது. மேலும், இறந்துபோன வாத்தின் உடலை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு, பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். அதில் கொடுக்கப்படும் அறிக்கையை வைத்தே எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Post‘பிரகாஷ்ராஜுக்கு வில்லனா பிள்ளைப் பூச்சியா?’
Next Postமாலைநேர நிலவரம், தங்கத்தின் விலை !
