Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இதயத்தைத் தொட மொழி அவசியமில்லை, ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதி: "பியாண்ட் தி க்லௌட்ஸ்"

On February 18, 2018
_JCP6291
Share
_JCP6291 டச்சிங்கான கதைகளை தன் படைப்புகளால் பேச வைத்து பலகோடி ரசிகர்களைத் தன் வசம் வைத்திருக்கும் ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதி, 'பியாண்ட் தி க்லௌட்ஸ்' என்ற இந்தி திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். ஈரானிய மொழியில் இல்லாமல் மஜித் மஜீதி, இயக்கும் முதல் படம் இது. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 20 ம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, புதுமுக நடிகர் இஷான் கத்தார், மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ள இப்படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை நேசிக்கும் சென்டிமென்ட்ஸ்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மஜித் மஜீதி இயக்கத்தில் உருவான 'பியாண்ட் தி க்லௌட்ஸ்' படத்தின் இசை அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் மஜித் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன், கவுதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுஜாய் குட்டி ஆகியோர் முன்னிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டியது. கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை எப்படி நேசிக்கவேண்டும் என டச்சிங்கான பல சீன்களை கண்முன் நிறுத்தி ரசிகர்கள் மத்தியில் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்தது. உணர்வுகளை இசை மொழியால் வருடும் துள்ளல் மெலடிகளுக்கு செவி கொடுக்கும் வகையில் ரஹ்மானின் இசை அமைந்துள்ளது. நாமா பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு தயாரிப்பளரான கிஷோர் அரோரா கூறுகையில், ‘மஜீத்தின் படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் அடையும். மனித உணர்வை விளக்கி பார்வையாளர்களின் இதயத்தைத் தொட மொழி அவசியமில்லை என்பதை வெளிப்படுத்திய மஜீத்தின் 'பியாண்ட் தி க்லௌட்ஸ்' படத்தை ஒரே நேரத்தில் வெளியிடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்’ என பெருமிதத்துடன் கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.