Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு: கடலூரில் இன்று திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

On December 15, 2017
purohit-1-e1513311287348
Share


purohit-1-e1513311287348

கடலூரில் ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாநில சுயாட்சி கொள்கைக்கு விரோதமாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யவும் விதமாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தினார். இதனை மு.க.ஸ்டாலின் கண்டித்ததுடன், இனியும் ஆளுநர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் திமுக சார்பில் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச.15) ஆளுநர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். ஆளுநரின் ஆய்வைக் கண்டிக்கும் விதமாக கடலூர் மாவட்ட திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மாநில சுயாட்சிக் கொள்கையை நிலைநாட்டவும் ஆளுநரின் அத்துமீறிய அதிகார வேட்கைக்கு கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையிலும், அறவழியிலான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.