ஆர்.கே.நகர் ஒரே நாளில் 80 சதவீதம் பணம் விநியோகம்!

ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகின்றன.
இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களுக்கு இன்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மணி நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 80 சதவீத வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. எஞ்சிய வாக்காளர்களுக்கு இன்று இரவோ அல்லது நாளையோ கொடுத்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் புதிய 2000 ரூபாய் நோட்டாகும். இதனால் ஆர்கே நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Next Postபாஜக தேசிய செயலாளர் நாகையில் கைது!
