Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் திமுக நிர்வாகியா...?

On July 13, 2024
WhatsApp Image 2024-07-13 at 10.37.47
Share
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னையில் அவரது வீட்டு வாசலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் இருந்த 11 பேரையும் செம்பியம் போலீசார் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 11 பேரையும் பரங்கிமலையில் உள்ள இணை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆம்ஸ்ட்ராங்கைக் கொல்ல எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? தொடர்பில் இருப்பது யார்? போலீசார் 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில் கத்தியுடன் ஓடியவர் கைதான ராமு என்கிற வினோத் என்பது தெரியவந்துள்ளது. இந்த ராமு ரவுடி ஆற்காடு சுரேஷின் மாங்காடு கிளப்பில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், ராமு ஆகியோரின் வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், கைது செய்யப்பட்ட 11 பேரின் 6 மாத வங்கிப் பரிவர்த்தனைகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். போலி நம்பர் பிளேட்களை பயன்படுத்தி, வேறு ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் வந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருசக்கர வாகன உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பெரம்பூர் பகுதியில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கும்பல் 10 நாட்களாக காத்திருந்தது தெரியவந்துள்ளது. பெரம்பூர் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு பிளாண் போட்டதாகக கூறப்படுகிறது. ரத்தம் அதிகம் ஓடும் நரம்புப் பகுதிகளை வெட்டவும், தவறவிடாமல் இருக்கவும் அவர்கள் திட்டமிட்டிருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில், இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டது கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் என்பதும், அவர் திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பட்டினம்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷுடன் 12 ஆண்டுகளாக வேலை செய்து வந்த அருள் சுரேஷின் உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது.தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் தலைமையில் பாலு என்பவரின் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் ஆம்ஸ்ட்ராங் வெட்டிய பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவுக்கு கொண்டு சென்று கொன்றது எப்படி? என நடத்தி காட்டி விசாரணை நடத்த உள்ளதாக கூறுகின்றனர். இருப்பினும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றால் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், 11 பேரையும் தனித்தனியாக வைத்து கொலை நடந்த இடத்தில் இருந்து வீடியோ கால் மூலம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.அதாவது வீடியோ கால் மூலம் போலீஸ் காட்சியைக் காட்டியபோது 11 பேர் எப்படி அந்தப் பகுதிக்கு வந்தனர்? யார் என்ன செய்தார்கள்? எந்த தெருவில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தார்கள்? ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ், நரேஷ், சீனிவாசன் ஆகிய மேலும் 3 பேரை கைது செய்து செம்பியம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்ட தி.மு.க நிர்வாகி அருள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது செல்போன் எண்களின் அடிப்படையில் சதீஷ், நரேஷ், சீனிவாசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.