Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆந்திர தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து...43 பயணிகள் உயிர் தப்பினர்!

On August 31, 2017
Andhra_Bus_Fire
Share
Andhra_Bus_Fire ஆந்திர மாநிலம், கடப்பாவிலிருந்து 43 பயணிகள் கொண்ட தனியார் சொகுசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு விஜயவாடா நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்த பஸ், பிரகாசம் மாவட்டம், ஓங்கோலை அடுத்துள்ள முகமது புரம் கிராமம் அருகே வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென இன்ஜினிலிருந்து புகை கிளம்பியதை கவனித்த ஓட்டுநர், பஸ்ஸை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கி விட்டார். இதற்கிடையே பஸ்ஸில் தீ மளமளவென பரவியது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைப்பதற்குள் பஸ் தீயில் கருகியது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.