ஆத்மநாத ஈஸ்வரர் ஆலய பங்குனி உத்திர திருக்கல்யாணம் !

அம்பத்தூர், மேனாம்பேட்டில் உள்ள அருள்மிகு அன்னப்பூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் 18-ம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
தொண்டை நாட்டின் 32 பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களில் 51வது ஊர் என்று அழைக்கப்படும் அம்பத்தூர் மாநகரத்தில் அமைந்திருக்கும் அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயம், பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களான திருமுல்லைவாயில் மற்றும் பாடி திருவல்லிதாயம் ஆலயத்திற்கு நடுநாயகமாகவும், திருமுல்லைவாயில் ஆலயத்திற்கு ஈசான்ய லிங்கமாகவும் கருதப்படுகிறது.
பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்த சிவாலயத்தில் நிகழும் ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 16-ம் நாள் (30.03.18) வெள்ளிக்கிழமை, சதுர்த்தசி பௌர்ணமி திதி, உத்திர நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் மாலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்ளாக ஆத்மநாத ஈஸ்வரர் – அன்னபூரணி அம்பாளுக்கும், சிவசுப்ரமண்யர் – வள்ளி தேவசேனா அம்பாள்களுக்கும், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் – மனோன்மணி அம்பாளுக்கும் பங்குனி உத்திர திருக்கல்யாணம் கோவர்த்தன நேசப்பெருமாள் எழுந்தருளி அருள்மிகு ஸ்ரீசுந்தர விநாயகர் ஆலயத்தில் நடைபெறவிருக்கிறது.
திருமண வைபவத்தில் அனைத்து ஆன்மிக பக்தர்களும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவனின் அருள்பெற வேண்டுகிறோம்.
திருமண வைபவத்தில் அனைத்து ஆன்மிக பக்தர்களும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவனின் அருள்பெற வேண்டுகிறோம்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
