Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆதார் எண்ணை இணைக்க சென்ற பெண் அதிர்ச்சி..! ஒரே ஆதார் அட்டையில் 9 மொபைல் எண்கள் இணைப்பு..

On January 23, 2018
Aadhar-Card
Share
Aadhar-Card ஆதார் அட்டை எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க சென்ற பெண் ஒருவர் தனது அட்டையுடன் ஒன்பது மொபைல் எண்கள் இணைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பெண் ஏர்டெல் அலுவலகத்திற்கு தன்னுடைய ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் இணைப்பதற்காக சென்றார். ஆனால் அவர் கொடுத்த ஆதார் எண்ணுடன் ஏற்கனவே 9 மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்தார். இதற்கு பதிலளித்த ஆதார் நிறுவனம், இப்போது தங்கள் ஆதார் அட்டையுடன் எத்தனை எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த விசயத்தில், உங்கள் ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்தியதற்காக அந்த நிறுவனத்தின் மீது டிராய் இடம் புகார் அளியுங்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஆதாரங்களுடன் அந்த நிறுவனம் பதிலளிக்க வேண்டும். முன்னர் பின்பற்றுவந்த முறையில் உங்கள் ஆவணங்களுடன் எத்தனை எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியாது என கூறியுள்ளது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு ஏர்டெல் நிறுவனம் தற்போது பதிலளித்துள்ளது. அந்த பெண்ணின் ஆதார் அட்டையில் வேறு மொபைல் எண்கள் இணைக்கப்படவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.