ஆண்ட்ரியா உதட்டில் அழுத்தமாய் முத்தம், திரைக்கதைக்கு நாலரை வருடங்கள், அடுக்கடுக்காய் ‘அவள்’ படத்தின் சுவாரஸ்யங்கள்!

தன்னுடைய நெருங்கிய நண்பர் மிலிந்த் இயக்க சித்தார்த் கதாநாயகனான நடித்து, வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம்தான் அவள்!
ஆண்ட்ரியாவின் உதட்டைக் கவ்விப் பிடித்து சித்தார்த் முத்தமிடும் சூடான காட்சியோடு மிரட்டலாக வந்திருக்கிற அவள் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய நாயகன் சித்தார்த், "நானும், இயக்குனர் மிலிந்தும் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனர்களாக ஒன்றாக வேலை பார்த்தோம். எங்கள் நட்பு 17 வருடங்களை தாண்டியது. ஒரு உண்மைக்கதையை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை எழுதியிருக்கிறோம்.
நல்ல ஒரு ஹாரர் படத்தை எடுத்து மக்களை பயமுறுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கனவு. அதை இந்த படத்தின் மூலம் செய்திருக்கிறோம். இந்த படத்துக்கு பின் இயக்குனர் மிலிந்த் பேசப்படுவார். படத்தின் நாயகி ஆண்ட்ரியா நன்றாக தமிழ் பேசக்கூடிய நடிகை. அவர் படத்தின் மிகப்பெரிய தூண். ஜில் ஜங் ஜக் படத்தில் வேலை செய்த டீம் இதிலும் பணியாற்றி இருக்கிறது. இப்படி ஒரு பெரிய பட்ஜெட் ஹாரர் படத்தை நாங்கள் எடுத்திருப்பது எங்களுக்கு பெருமையான விஷயம். வரும் நவம்பர் 3ஆம் தேதி உங்களை மிரட்ட வருகிறாள் அவள்" என்றார்.
''ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து நாலரை வருடங்களாக நானும், சித்தார்த்தும் இணைந்து இந்த படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறோம். இந்த படத்தின் டிரைலரை பார்த்தால் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்’’ என்றார் இயக்குனர் மிலிந்த்.
''சென்னை எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். இந்த சென்னை தான் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. உலகநாயகன் கமல் அவர்கள் தான் ஹேராம் படத்தில் என்னை ஒரு நடிகனாக அறிமுகப்படுத்தினார். ரங்தே பசந்தி படத்துக்கு பின் 12 வருடங்கள் கழித்து சித்தார்த்துடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. எப்போதுமே நல்ல சினிமா நல்ல ஒரு குழுவால் தான் உருவாகிறது. பாலிவுட் எப்போதும் தமிழ் சினிமாவை உற்று கவனித்துக் கொண்டே தான் இருக்கிறது. தொழில்நுட்பம், இசை போன்றவற்றில் தமிழ் சினிமா எப்போதும் முன்னோக்கியே இருக்கிற்து. தமிழ, தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்த அவள் படம் வெளியாக இருக்கிறது. இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான ஹாரர் படமாக இருக்கும்'' என்றார் நடிகர் அதுல் குல்கர்னி.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குனர் சிவஷங்கர் , இசையமைப்பாளர் கிரீஷ் கோபாலகிருஷ்ணன். ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
