ஆகஸ்ட்டில் வெளியாகும் நோக்கியா 8 ஸ்மார்ட்போன்?

எச்எம்டி குளோபல் நிறுவனம் ஆகஸ்டு 16-ம் தேதி விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதற்கான அழைப்பிதழ்களை வெளியிடப்பட்டது. நோக்கியா போன்களின் அடுத்த மைல்கல் விழாவாக இது அமையும் என அழைப்பிதழலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இவ்விழாவில் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
* 5.3 இன்ச் குவாட் எச்டி 2560x1440 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
* ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
* 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
* 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
* 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ்
* 13 எம்பி செல்ஃபி கேமரா
* கைரேகை ஸ்கேனர், நோட்டிபிகேஷன் எல்இடி
* டூயல் ஸ்பீக்கர்
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
புதிய நோக்கியா 8 புளூ, ஸ்டீல் மற்றும் புளூ மற்றும் கோல்டு காப்பர் நிறங்களில் வெளியாகும் என்றும் இதன் விலை 686 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.44,195 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
