Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆகஸ்டில் துவங்குகிறது உலகநாயகனின் "இந்தியன்-2"...

On March 23, 2018
Tamil-image
Share

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷங்கர் நடஇயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த 1996ல் ரிலீஸான படம் இந்தியன். இப் படத்துக்குப் பின் கமல், ஷங்கர் இருவரும் எந்த படத்திலும் சேர்ந்து பணியாற்றவில்லை. சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின் இந்தியன்-2வில் இணையவுள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது கட்சி ஆரம்பித்து, கமல் பிஸியாக சுற்றி வருகிறார். பின் பிக் பாஸ் இரண்டாவது சீஸனையும் தொகுத்து வழங்குவதாக தெரிகிறது.

இதற்கு பின் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.