Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அ.தி.மு.க துரோகிகளோடு மு.க.ஸ்டாலின் சேர்ந்து எங்களது ஆட்சியை கலைக்க சதி:-வி.தினகரன்..

On March 25, 2017
dinakaran
Share
dinakaran எங்களின் துரோகிகளோடு தி.மு.க. சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க சதி செய்கிறது என்று அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை கழகத்தில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவரிடம் ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் மற்றும் வேட்பு மனு பரிசீலனையின் போது சிறிது நேரம் நிறுத்தி வைத்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிருபர்கள் கேட்டனர். அதற்கு டி.டி.வி.தினகரன் பதிலளித்து பேசினார் அதில் அவர் கூறியது யாதெனில்:-எங்களின் துரோகிகளோடு தி.மு.க. சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க சதி செய்கிறது. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேரிடம் ரகசியமாக தி.மு.க. பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் எங்களுக்கு வருகிறது. எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை தி.மு.க.வினர் அணுகியதை கூறியுள்ளனர். ஓ.பி.எஸ். அணியுடன் சேர்ந்து அ.தி.மு.க.வை முடக்க நினைக்கும் தி.மு.க.வின் எண்ணம் நிறைவேறாது. துரோகிகளுடன் இணைந்து மு.க.ஸ்டாலின் செயல்பட்டாலும் அவரது கனவு பலிக்காது. சசிகலாவை பொதுச் செயலாளராக ஓ.பன்னீர் செல்வமும், மதுசூதனனும் தான் மொழிந்தார்கள். ஆனால் இன்று அவர்கள் துரோகம் இழைத்து விட்டு தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு இந்த இயக்கத்தை அழிக்க பார்க்கிறார்கள் என்று கூறினார்...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.