அஸ்வினை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி: சி.எஸ்.கே பின்வாங்கியது

சென்னை அணை 3 வீரர்களை ரைட் டு மேட்ச் மூலம் அணிக்காக தக்கவைத்துள்ளதால், அஸ்வினை ஏலத்தில்தான் எடுக்க வேண்டும் என்ற நிலை உருவானது. சில நாட்களுக்கு முன், சென்னை அணியின் கேப்டன் தோனியும், அஸ்வினை ஏலத்தில் எடுக்க முன்னுரிமை தருவோம் என்று கூறியிருந்தார்.
முதல் கட்ட ஏலத்தில் ஷிகர் தவானுக்குப் பிறகு அஸ்வின் ஏலத்துக்கு வந்தார். ஆரம்பத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே அஸ்வினை எடுக்க கடும் போட்டி இருந்தது. ஆனால் ஏலத்தொகை 4 கோடியை தாண்டியவுடன் சென்னை அணி பின் வாங்கியது.
ராஜஸ்தான் அணி 4.2 கோடியுடன் போட்டியில் குதித்தது. ஆனால் ஏலத் தொகை ரூ. 5, 6, 7 என கோடிகளைத் தாண்ட போட்டி மும்முரமானது. கடைசியில் ரூ. 7.6கோடிக்கு அஸ்வினை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
