Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அரைகுறை ஆடை அணிந்து நடிக்க விருப்பம் இல்லை! சிஞ்சுமோகன்

On March 4, 2017
Pulipaarvai-Audio-Launch-Stills-71
Share
Pulipaarvai-Audio-Launch-Stills-71 நான் நடிக்கும் படங்களில் உடம்பை காட்டி நடிப்பதில் எனக்கு பெரிய ஆர்வம் கிடையாது என்று நடிகை சிஞ்சுமோகன் தெரிவித்துள்ளார். தமிழில் திரையுலகில் புலிப்பார்வை’ படம் மூலம் அறிமுகமானவர் சிஞ்சு மோகன். இவர் தமிழில் புதிது. ஆனால், மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘அய்யனார் வீதி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிஞ்சு மோகன். இந்த படத்திற்கு பிறகு தமிழில் எனது மார்க்கெட் சூடுபிடிக்கும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். பின்னர் மேலும் அவர் கூறுகையில், ‘‘மலையாளத்தில் சில படங்களில் நடித்தபோதும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆசை என்னுள் இருந்தது. அதன்படி சரியான நேரத்தில் ‘புலிப்பார்வை’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்தப் படம் சரியாக போகவில்லை என்றாலும் ஒரு நல்ல அறிமுகத்தை எனக்கு கொடுத்தது. அதையடுத்து இப்போது ‘அய்யனார்வீதி’ படத்தில் யுவனுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். முதல் படத்தை விட இந்த படத்தில் எனக்கு வெயிட்டான வேடம் கிடைத்துள்ளது. அதனால் ரொமான்ஸ் மட்டுமின்றி எமோசனல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். இந்த படத்திற்கு பிறகு கோலிவுட்டில் எனக்கு கண்டிப்பாக ஒரு நல்ல இடம் கிடைக்கும். மேலும் பெரிய ஹீரோ படங்கள் என்பதை விட நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். அதோடு கவர்ச்சி விஷயத்தில் கட்டுப்பாடு வைத்துள்ளேன். எனக்கு உடம்பை காட்டி நடிப்பதில் பெரிதாக ஆர்வம் எதுவும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.