Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அருண் விஜய்க்கு மூன்று ஹீரோயின்கள்!

On July 26, 2017
thanya
Share
thanya இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் கலந்து உருவாகிக் கொண்டிருக்கும் படம் "தடம்". இப்படத்தினை 'முன்தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க', 'மீகாமன்' ஆகிய படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்குகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதமே தொடங்கிவிட்டது. இந்தப் படத்துக்கு அருண்ராஜ் என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையமைக்கிறார். அருண் விஜயின் 24வது படமான இதில் முதலில் இரண்டு நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள் என சொல்லப்பட்டது. இப்போது மூன்று நாயகிகள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். தெலுங்கில் ஜெகபதி பாபு நடித்த 'படேல் எஸ்.ஐ.ஆர்' படத்தில் நடித்த தன்யா, 'சைவம்', 'பசங்க 2' ஆகிய படங்களில் நடித்த வித்யா பிரதீப் மற்றும் அறிமுக நாயகி ஸ்ம்ரித்தி ஆகியோர் 'தடம்' படத்தில் இணைந்துள்ளார்கள். படத்தின் முதல் ஷெட்யூலை சில தினங்களுக்கு முன்பு முடித்திருக்கிறது படக்குழு. இரண்டாவது ஷெட்யூலை ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கவிருக்கிறார்கள். இப்படம் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.