Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அருண்விஜய்யின் எதிர்பார்ப்புமிக்க படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது

On February 23, 2021
Arunvijay Dubbing
Share

அருண் விஜய் மற்றும் அறிவழகன் கூட்டணியில் வெளிவந்த மெடிக்கல் திரில்லரான “குற்றம் 23” மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் "AV31" அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே, படம் என்னவாக இருக்குமென்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு எகிறியுள்ளது.

'All in Pictures' சார்பில் ராகவேந்திரா தயாரித்திருக்கும் படம் "AV31". அறிவழகன் இப்படத்தை இயக்குகிறார். அருண்விஜய் நடிக்கும் இப்படத்தில், ரெஜினா கஸண்ட்ரா நாயகியாக நடிக்கிறார். ஸ்டெஃபி படேல் மற்றும் பகவதி பெருமாள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் உளவு சம்பந்தமான திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண்விஜயின் திரைப்பயணத்தில், மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வருகிறது. "AV31" படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் நேற்று காலை, சென்னையில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது.

கோடை காலத்தில் படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், ட்ரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்.

சாம் CS இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். B.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார்.

2021 வருடத்தில் அருண் விஜய் "சினம்", "அக்னி சிறகுகள்", "AV32" ( சூர்யாவின் 2D Entertainment தயாரிப்பில் ), என எதிர்பார்ப்பு மிக்க முக்கிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில முக்கியமான படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.