Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

உதயநிதியுடன் ஜோடி சேரும் தான்யா

On October 16, 2021
Nejuku Neethi
Share

உதயநிதி ஸ்டாலின் நடிக்க இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படம் "நெஞ்சுக்கு நீதி". இந்த அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது. தற்போது “நெஞ்சுக்கு நீதி” என இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசை திபு நினன் தாமஸ். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ரூபன் கவனிக்கிறார். சண்டைப்பயிற்சிக்கு Stunner சாம் பொறுப்பேற்கிறார்.

'Zee Studios' மற்றும் போனி கபூர் அவர்களின் 'Bayview Projects' வழங்க ராகுல் அவர்களின் 'ROMEOPICTURES' இப்படத்தை வெளியிடுகின்றது.

வெகு வேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.