அரியர்ஸ் மாணவர்களுக்கு சமர்ப்பணம் ‘அதிமேதாவிகள்’

அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்கம் தயாரிக்க, சுரேஷ் ரவி (அறிமுகம்) மற்றும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா நாயர் நடிக்க,
உடன் , தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது (கோலி சோடா) மற்றும் மாரி படப்புகழ் கல்லூரி வினோ முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்க,
அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘அதி மேதாவிகள்’ நட்பையும் நகைச்சுவையையும் மையமாக கொண்டு உருவாகும் படம் இது என்கிறது படக் குழு
“நானும் ஒரு அரியர்ஸ் மாணவன் என்பதால், இந்த படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
எங்கள் மேல் நம்பிக்கை வைத்து, இந்த படத்தை தயாரித்தது மட்டுமின்றி எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பேராதரவாக இருந்த ,
எங்கள் அதி மேதாவிகள் படத்தின் தயாரிப்பாளர் மால்காம் அவர்களுக்கு, எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
எல்லா அரியர்ஸ் மாணவர்களுக்கும் எங்களின் அதி மேதாவிகள் திரைப்படத்தை அர்ப்பணிக்கிறோம் ” என்று உற்சாகமாக கூறுகிறார் கதாநாயகன் சுரேஷ் ரவி.
“பெற்றோர்களின் வற்புறுத்தலால் இரண்டு மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, படிக்க முடியாமல் அரியர்ஸ் மேல் அரியர்ஸ் வைக்கின்றனர்.
அதை சரி செய்வதற்கு அவர்கள் என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பது தான் எங்கள் ‘அதி மேதாவிகள்’ படத்தின் கதை.
விரைவில் எங்கள் படத்தை வெளியிட நாங்கள் முடிவு செய்து இருக்கின்றோம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன்.
“என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை வைத்து இந்தப் படம் எடுக்க்கப்பட்டு இருந்தாலும் இது எல்லா தொழிற்படிப்புகளுக்கும் பொருந்தும் .
அரியர்ஸ் வைக்கும் மாணவர்கள் பலரும் ஒரு நிலையில் முக்கியமான தவறை செய்கிறார்கள் . அது கூடாது என்ற மெசேஜும் படத்தில் இருக்கிறது .
அது என்ன தப்பு என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்” என்கிறார் தயாரிப்பாளர் மால்கம்
படத்தின் முன்னோட்டத்தில் நகைச்சுவை சுவை இருக்கிறது .
அரியர்ஸ் இல்லாத வசூல் கிடைக்கட்டும் !Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
