Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"அயோக்யா" படத்தில் இரும்புத்திரை நாயகன் !

On May 15, 2018
vishal10
Share
விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அர்ஜுன் வில்லனாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். தகவல் திருட்டை மையமாக வைத்து, விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ள படம் இது . படம் பார்த்த அனைவருமே படத்தைக் கொண்டாடி வருகின்றனர். 
இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘டெம்பர்’ எனும் தெலுங்குப் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் விஷால். பூரி ஜெகன்நாத் இயக்கிய இந்தப் படத்தில், ஜூனியர் என்.டி.ஆர். ஹீரோவாக நடித்திருந்தார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்தார். 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் படம் ரிலீஸானது. போலீஸாக இந்தப் படத்தில் நடித்திருப்பார் ஜூனியர் என்.டி.ஆர். ‘டெம்பர்’ படம், தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் ஹீரோவாக விஷால் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ‘சைத்தான் கா பச்சா’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தைத் தொடர்ந்து ராஷி கண்ணா நடிக்கும் மூன்றாவது தமிழ்ப் படம் இது. தமிழ் ரீமேக்கை, ஏ.ஆர்.முருகதாஸின் அசோஸியேட்டான வெங்கட் மோகன் இயக்குகிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு ‘அயோக்யா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். இந்தி ரீமேக்கை, ரோகித் ஷெட்டி இயக்குகிறார். ஹீரோவாக ரன்வீர் சிங்கும், ஹீரோயினாக சரா அலி கானும் நடிக்கின்றனர். கரண் ஜோஹர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘சிம்பா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் டிசம்பர் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.