Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'அப்துல் கலாமின்' கல்லூரியில் ''டிராஃபிக் ராமசாமி'' படத்தின் டைட்டில் டிசைன் அறிமுக விழா நடந்தது.

On March 9, 2018
abdul_kalam_hd_images
Share
T.R Title Design Release அப்துல் கலாமின் கல்லூரியில் 'டிராஃபிக் ராமசாமி' சென்னை குரோம்பேட்டையில் உள்ள MIT பொறியியல் கல்லூரியில் தான் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்அப்துல் கலாம் அவர்கள் ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங் படித்தார்.அந்த கல்லூரியில் கடந்த சனிக்கிழமை சுமார் மூவாயிரம்பொறியியல் மாணவர்கள் மத்தியில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின்டைட்டில் டிசைன் அறிமுக விழா நடந்தது. அதில் மாணவர்கள்ஹரிஷ், மற்றும் ரேஷ்மா டைட்டிலை வெளியிட்டு மகிழ்ச்சியில்ஆரவாரம் செய்தனர். அப்துல் கலாம் படித்த எங்கள் கல்லூரியில்டிராஃபிக் ராமசாமி பட டைட்டிலை வெளியிட்டதை மிகுந்தபெருமையாக கருதுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். படம் பற்றி திரு.எஸ்.ஏ சந்திரசேகரன் அவர்கள் கூறும்போது ”யாரையும் எதிர்பார்க்காமல் எளியவர்களுக்கு ஆதரவாகவும் அதிகாரவர்க்கத்துக்கு எதிராகவும் ஒன் மேன் ஆர்மியாக ஐம்பதுஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் போராளியின் படத்தைநாட்டு மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்க்க தான் இவ்விழாவைமாணவர்கள் மத்தியில் நடத்தினோம் ” என்றார். அவ்விழாவில் டிராபிக் ராமசாமியாக நடிக்கும்திரு.S.A.சந்திரசேகரன், அம்பிகா, லிவிங்ஸ்டன், புலி படதயாரிப்பாளர் P.T.செல்வகுமார் மற்றும் படத்தின் இயக்குனர் விக்கிஅவர்களும் கலந்து கொண்டனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.